மக்கள் தொகை கணக்கெடுப்பு: அமித்ஷா கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும் என்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
புதுடெல்லி,
சத்தீஸ்கரின் ராய்பூரில் செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 'மக்கள் தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும்; அது தொடா்பான முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியாகும்' எனத் தெரிவித்தாா்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'சாதிவாரி கணக்கெடுப்பை அனைத்து கட்சிகளும் கோரி வருகின்றன. ஆனால், இந்த விவகாரம் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அரசு தரப்பில் வெளியாகவில்லை.
கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் தாமதமாகியுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும் என்ற 'ரகசியத்தை' உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இத்தகைய தெளிவான பதிலை எதிா்பாா்க்கவில்லை' என சாடியுள்ளார்.
Related Tags :
Next Story