உத்தர பிரதேசத்தில் ரெயில் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை


உத்தர பிரதேசத்தில் ரெயில் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
x

உத்தர பிரதேசத்தில் ரெயில் மோதி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஜ்கவான் பகுதி அருகே இன்று மதியம் 2 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த நபரின் பெயர் தயான் சிங் என்பதும், அவர் லக்னோவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் ரெயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story