நண்பனின் வீட்டிற்கு பார்ட்டிக்கு சென்ற கல்லூரி மாணவன் 7வது மாடியில் இருந்து விழுந்து பலி


நண்பனின் வீட்டிற்கு பார்ட்டிக்கு சென்ற கல்லூரி மாணவன் 7வது மாடியில் இருந்து விழுந்து பலி
x

நண்பனின் வீட்டில் நடைபெற்ற பார்ட்டிக்கு சென்ற கல்லூரி மாணவன் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தான்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சட்டக்கல்லூரியில் பயின்று வரும் மாணவன் தபஸ். காசியாபாத்தை சேர்ந்த இவர் நேற்று இரவு நொய்டாவில் உள்ள தனது நண்பன் வீட்டில் நடைபெற்ற பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இந்த பார்ட்டி நடைபெற்றது. பார்ட்டியின்போது மதுபானமும் குடித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சட்ட கல்லூரி மாணவன் தபஸ் 7வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தபசை அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்தனர். ஆனால், தபஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story