காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன்


காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 28 May 2024 11:22 AM IST (Updated: 28 May 2024 1:13 PM IST)
t-max-icont-min-icon

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

மத்திய அரசை குறை கூறுவது மட்டும் இன்றி, நாட்டு மக்களின் சாதனைகளை குறைத்து மதிப்பிடும் வேலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தற்போது மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.

பா.ஜனதா அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குறை கூறி வருகிறார். அவர் புள்ளிவிவரங்களுடன் விமர்சிக்கவில்லை. பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தில் சிறப்பாக ஈடுபட்டது. எதிர்க்கட்சியினரால் முடிந்தால் எங்களை எதிர்த்து திறம்பட போராடுங்கள். எங்களது வெற்றியை குறை கூறுவதற்காக எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர்" என்றார்.


Next Story