டெல்லி தேர்தல் அலுவலரின் எக்ஸ் தள பக்கத்தில், பாஜக குறித்த செய்தி பகிரப்பட்டதால் அதிர்ச்சி
டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், டெல்லி தேர்தல் அலுவலரின் எக்ஸ் தள பக்கத்தில், பாஜக குறித்த செய்தி பகிரப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பகிர்வு தொடர்பாக புகைப்படத்தை வெளியிட்ட, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மாவட்ட தேர்தல் அதிகாரி பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, பாஜக செய்தி தவறுதலாக பகிரப்பட்டதாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Related Tags :
Next Story