பயிற்சி மையத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது


பயிற்சி மையத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
x

ஆசிரியரின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படிக்கும் 9 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மசாஜ் செய்யும்படி 35 வயதான ஆசிரியர் ஒருவர் வற்புறுத்தி உள்ளார். மேலும் அவர், சிறுவர்களை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சிறுவர்களை ஆபாசமாக தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது

இந்த சம்பவம் பற்றி சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பயிற்சி மையத்திற்கு சென்று புகார் அளித்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து பயிற்சி மையத்தின் நிர்வாகம், அம்பர்நாத் போலீசில் புகார் அளித்தது.

இதன்பேரில் போலீசார் அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார், அந்த ஆசிரியரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story