புல்டோசர் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


புல்டோசர் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
x

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

டெல்லி,

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கை வட மாநிலங்களில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குற்ற வழக்குகளில் கைதானவர்கள், தொடர்புடையவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் நடவடிக்கை பேசுபொருளாக உள்ளது.

இதனிடையே, அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த புல்டோசர் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிஆர் கவய், விகே விஷ்வநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடிப்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டாலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் அவர்களது வீடுகளை இடிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது. புல்டோசர் நடவடிக்கை மூலம் வீடு இடிப்பால் பெண்கள், குழந்தைகள் இரவில் நடுத்தெருவில் நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

எந்த வீட்டையும் இடிப்பதற்கு முன் 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வீடு இடிக்கும் நடைமுறைகளை வீடியோவாக எடுக்க வேண்டும். அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும்போது இந்த விதி பொருந்தாது. கட்டிட இடிப்பு தொடர்பாக கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தால் இந்த உத்தரவு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story