ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றார்
3 ஆண்டுகளுக்கு சஞ்சய் மல்கோத்ரா அப்பதவியில் இருப்பார்.
மும்பை
ரிசர்வ் வங்கி கவர்னராக 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். புதிய கவர்னராக, வருவாய் செயலாளராக இருந்த சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று ரிசர்வ் வங்கியின் 26-வது கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்காக மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு வந்த அவரை மூத்த ஊழியர்கள் வரவேற்றனர். ஆவணங்களில் கையெழுத்திட்டு, மல்கோத்ரா பொறுப்பேற்றார். அப்போது, ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் சுவாமிநாதன், ராஜேஷ்வர் ராவ், ரவிசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மல்கோத்ரா பொறுப்பேற்ற புகைப்படங்களை ரிசர்வ் வங்கி தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு அவர் அப்பதவியில் இருப்பார்.
Related Tags :
Next Story