திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரெயில்வே போலீஸ்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ரெயில்வே போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 30 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக ரெயில்வே போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெண்ணின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,
குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடந்த 2022ல் இருந்து பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து, உறவை துண்டித்து இருக்கிறார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டியதாக கூறப்படுகிறது என்றார்.