ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை - 24 மணி நேரத்தில் 2-வது சம்பவம்


ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை - 24 மணி நேரத்தில் 2-வது சம்பவம்
x

ராஜஸ்தானில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த மாணவரின் பெயர் அபிஷேக் என்பதும், அவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் கோட்டா நகரில் உள்ள ஒரு பயிற்சி மைத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார்.

இது கோட்டா நகரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 2-வது தற்கொலை சம்பவமாகும். முன்னதாக அரியானாவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவரும் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story