பஞ்சாப்: காவல் நிலையத்தில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் - போலீசார் விளக்கம்


பஞ்சாப்: காவல் நிலையத்தில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் - போலீசார் விளக்கம்
x

Image Courtesy : ANI

காவல் நிலையத்தில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அது வெடி சத்தம் போல் இருந்ததால், காவல் நிலையத்தில் வெடி விபத்து நிகழ்ந்துவிட்டதாக எண்ணி உள்ளூர் மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு அதிகாலை நேரத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் காவல் நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். அதன்படி, காவல் நிலையத்தில் வெடி விபத்து எதுவும் நிகழவில்லை எனவும், காவல் நிலையத்திற்கு வெளியே இருக்கும் தற்காலிக சோதனை சாவடியின் மேற்கூரை மீது கனமான பொருள் விழுந்ததால் இவ்வாறு சத்தம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சோதனை சாவடியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு ஷீட் சேதமடைந்ததாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



Next Story