பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் சந்திப்பு


இந்தியா-பூடான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுடெல்லி:

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். அவருடன் பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் மற்றும் பூடான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் வந்தனர். டெல்லி வந்தடைந்த பூடான் மன்னரை, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை பூடான் மன்னர் தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story