இது கிராமமல்ல... குடும்பம் - சொந்த ஊரில் ஜனாதிபதி முர்மு பேச்சு
இது கிராமமல்ல... குடும்பம் என்று சொந்த ஊரில் ஜனாதிபதி முர்மு பேசினார்.
புவனேஸ்வர்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசா மாநிலம் மெயுபஜி மாவட்டம் அப்பர்பிடா கிராமத்தில் 1958ம் ஆண்டு ஜுன் 20ம் தேதி பிறந்தார்.
இதனிடையே, திரவுபதி முர்மு கடந்த 2022 ஜுலை 25ம் தேதி நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திரவுபதி முர்மு தான் பிறந்த ஊரான அப்பர்பிடா கிராமத்திற்கு இன்று சென்றார்.
சொந்த ஊரில் தான் படித்த பள்ளிக்கூடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அங்கு மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும், ஊர் மக்களையும் அவர் சந்தித்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி முர்மு, இது கிராமமல்ல, குடும்பம் என்று பேசினார். மேலும், 66 வயது ஆனபோதும் நான் வளர்ந்துவிட்டேன் என்று தோன்றவில்லை. எனது கிராமத்திலும், பள்ளியிலும் இப்போதும் நான் குழந்தைபோன்று உணருகிறேன்' என்றார்.
Related Tags :
Next Story