யு.பி.எஸ்.சி. தலைவராக பிரீத்தி சுதன் நியமனம்


யு.பி.எஸ்.சி. தலைவராக பிரீத்தி சுதன் நியமனம்
x
தினத்தந்தி 31 July 2024 12:47 PM IST (Updated: 31 July 2024 2:17 PM IST)
t-max-icont-min-icon

யு.பி.எஸ்.சி. தலைவராக இருந்த மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

யு.பி.எஸ்.சி. தலைவராக இருந்த மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை கடந்த 20ம் தேதி ராஜினாமா செய்தார். மனோஜ் சோனியின் பதவிக்காலம் 2029 இல் முடிவடைவதாக இருந்தது. எனினும், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், யு.பி.எஸ்.சி. தேர்வுக் குழு உறுப்பினராக இருக்கும் பிரீத்தி சுதனை அடுத்த தலைவராக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை (ஆகஸ்ட் 1) முதல் மறு உத்தரவு வரும் வரை அல்லது ஏப்ரல் 29, 2025 வரை யு.பி.எஸ்.சி. தலைவராக பிரீத்தி சுதன் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரீத்தி சுதன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். பின்னர், மத்திய சுகாதாரத்துறை செயலாளராகவும், பாதுகாப்புத்துறை இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.


Next Story