மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்


மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 28 Oct 2024 8:25 AM IST (Updated: 28 Oct 2024 8:50 AM IST)
t-max-icont-min-icon

இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடான ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சை பெற முடியும். இந்த திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. இதில் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த மூத்த குடிமக்களுக்கான காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 4.5 கோடி குடும்பங்களை சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story