3 அதிநவீன கடற்படை கப்பல்கள்; நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
: இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை, நாளை (ஜன., 15) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் இன்று (புதன்கிழமை) மும்பை வருகிறார்.
அவர் மும்பை கடற்படை டாக்யார்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஸ்ரீ போர்கப்பலை அர்பணிக்கிறார்.இதேபோல மாலை 3.30 மணிக்கு நவிமும்பை, கார்கர் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மூன்று கப்பல்களும் அதிநவீன வசதி கொண்டவை ஆகும். இந்தியாவின் கடற்படைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த கப்பல்கள் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story