இங்கிலாந்து மன்னருக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக தனது மனமார்ந்த வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார்.
புதுடெல்லி,
இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லசை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை இருவரும் வலியுறுத்தினர். மேலும், அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டின் முடிவுகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இருவரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதோடு மன்னரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரதமர் மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Related Tags :
Next Story