'பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார்' - அமித்ஷா பேச்சு


பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் - அமித்ஷா பேச்சு
x

பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்ற 27-வது மேற்கு பிராந்திய கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார். அவை வளர்ச்சியடைந்த பாரதம் 2047 மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆகியவை ஆகும். இந்த இரு இலக்குகளையும் அடைவதற்கு கூட்டுறவுத்துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.

மத்திய கூட்டுறவுத்துறையின் மூலம் நாட்டின் பல்வேறு விவகாரங்களில் புரட்சிகர மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே சமயம், மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப கூட்டுறவுத்துறையில் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Next Story