அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் - மத்திய மந்திரி தகவல்


அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் - மத்திய மந்திரி தகவல்
x

அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன்படி நாட்டின் 543 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல் துறை ஆகியவை உறுதிகொண்டுள்ளன."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story