உத்தர பிரதேசம்: ரெயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்


உத்தர பிரதேசம்: ரெயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்
x

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கன்னூஜ் ரெயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் நடைபெற்று வந்த இந்த கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் கட்டுமான பணி நடைபெற்று வந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சுமார் 35 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

கட்டிட விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.


Next Story