நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு


தினத்தந்தி 25 May 2024 5:21 AM IST (Updated: 25 May 2024 6:23 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது

டெல்லி,



Live Updates

  • 25 May 2024 7:43 AM IST

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். 

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.


Next Story