ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி


ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி
x

ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஒடிசாவின் முதல்-மந்திரியும், நிதித்துறை மந்திரியுமான மோகன் சரண் மாஜி இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக இன்று கூட்டத்தொடர் தொடங்கிய பின்னர், மறைந்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள மண்டிபங்கா கிராமத்தில், உணவு தட்டுப்பாடு காரணமாக மாம்பழ விதையில் இருந்து எடுக்கப்படும் கூழை சாப்பிட்டு 3 பழங்குடியின பெண்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். மாநில பா.ஜ.க. அரசு பொது உணவு விநியோக திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி எதிர்க்கட்சி பி.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மோகன் சரண் மாஜி தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை கூட்டத்தொடர் முதல் நாளிலேயே ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.


Next Story