மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதில் மாற்றம் செய்ய திட்டமா? - மத்திய மந்திரி பதில்


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதில் மாற்றம் செய்ய திட்டமா? -  மத்திய மந்திரி பதில்
x

காலிப் பணியிடங்களை குறித்த காலக்கெடுவுக்குள் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. தேவையின் அடிப்படையில், சிவில் சேவைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குறித்த காலக்கெடுவுக்குள் நிரப்ப அவ்வப்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகங்கள், துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story