இந்தியாவின் பொருளாதாரத்தை யாராலும் நிராகரிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்


இந்தியாவின் பொருளாதாரத்தை யாராலும் நிராகரிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 24 Oct 2024 9:16 AM IST (Updated: 24 Oct 2024 9:17 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதார வலிமை கொண்ட இந்தியாவை, எந்த நாடும் புறக்கணிக்க முடியாது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில், உலக வளர்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- அமெரிக்கா, சீனா உள்பட எந்த ஒரு நாட்டினாலும், இந்தியாவை புறக்கணிக்க முடியாது. இந்தியா ஜனநாயகம் மிக்க நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், உலகில் உள்ள ஒவ்வொரு 6 நபர்களிலும் ஒரு இந்தியர் இருக்கிறார். எனவே, இந்தியாவின் பொருளாதாரத்தை யாராலும் நிராகரிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் மற்றும் மிகப்பெரிய நாடுகளில் செயல்படும் பெரிய நிறுவனங்களில் திறமை வாய்ந்த இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் மூலம் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதல் பலதரப்பு வங்கி வரையில் அனைத்திலும் இந்தியா சிறந்த நாடாக உள்ளது.

இந்திய பொருளாதாரம் முன்பாக உள்ள மிகப்பெரும் சவாலாக வேலை வாய்ப்பு திறன் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பட்டம் முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால், இளைஞர்கள் பெற்றிருக்கும் டிகிரிக்கும் அவர்களுடைய வேலை வாய்ப்பு திறனுக்கும் இடையே இடைவெளி உளதாக வேலை அளிப்பவர்கள் கருதுகிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story