இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு


இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Dec 2024 8:56 AM IST (Updated: 21 Dec 2024 9:00 AM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 55வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின்55வது ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மந்திரிகள் மற்றும் பிற அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில், மத்திய பட்ஜெட் 2025க்கு முன்னதாக இது ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கீழ் உள்ள மந்திரிகள் குழுவின் (ஜி.ஓ.எம்.) முக்கிய நிகழ்ச்சி நிரல்களில், சுகாதார காப்பீட்டு பிரீமியங்களில் முன்மொழியப்பட்ட விகிதக் குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி வரம்பில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளை (ஏ.டி.எப்) சேர்ப்பது ஆகியவை அடங்கும். கூடுதலாக, இன்றைய கூட்டத்தின் போது கிட்டத்தட்ட 150 பொருட்களின் விலையை திருத்துவது குறித்து கவுன்சில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த விகிதப் பகுத்தறிவு நடவடிக்கை, மத்திய அரசுக்கு சுமார் ரூ.22,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மருத்துவ, ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், விமான எரிபொருளை மட்டும் ஜி.எlஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.


Next Story