மூடா முறைகேடு நெருக்கடி: சித்தராமையா இன்று டெல்லி பயணம்


மூடா முறைகேடு நெருக்கடி: சித்தராமையா இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 23 Aug 2024 1:26 AM GMT (Updated: 23 Aug 2024 7:57 AM GMT)

மூடா முறைகேடு விவகாரம் சித்தராமையாவின் பதவிக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவா்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு வருகிற 29-ந் தேதி வரை கா்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் சித்தராமையாவின் பதவிக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் முதல்-மந்திரி சித்தராமையா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவருடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பயணிக்க உள்ளார்.

டெல்லியில் மேலிட தலைவர்களை அதாவது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து, வழக்கின் நிலை, அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.


Next Story