முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த பயணி - டெல்லி விமான நிலையத்தில் கைது


முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த பயணி - டெல்லி விமான நிலையத்தில் கைது
x
தினத்தந்தி 10 Jan 2025 4:24 AM IST (Updated: 10 Jan 2025 8:58 AM IST)
t-max-icont-min-icon

முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

டெல்லி,

தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை டெல்லிக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் பையில் இருந்து 777 கிராம் எடைகொண்ட முதலை மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த கனடா நாட்டு பயணியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலை மண்டை ஓட்டை தாய்லாந்தில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story