'புளூடூத்' பயன்படுத்தி அரசு பணிக்கான தேர்வு எழுதியவர் கைது


புளூடூத் பயன்படுத்தி அரசு பணிக்கான தேர்வு எழுதியவர் கைது
x

தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதி கொண்டு இருந்த ஒரு நபர் மீது கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கிராம வளர்ச்சி அதிகாரி பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. அதுபோல், துமகூரு மாவட்டம் திலக்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு கல்லூரியிலும் தேர்வு நடைபெற்றது. அரசு பணிக்காக நடந்த இந்த தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதி கொண்டு இருந்த ஒரு நபர் மீது கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது புளூடூத்தை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புளூடூத்தை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை ஒருவரிடம் கேட்டு எழுதி அரசு பணிக்கான தேர்வில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதுபற்றி திலக்பார்க் போலீசார் அவரை பிடித்து சென்றுள்ளனர். அந்த தேர்வர், பெங்களூரு ராமமூர்த்திநகரை சேர்ந்தவர் என்று தெரிந்தது.


Next Story