ஒடிசாவில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு


ஒடிசாவில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 27 Jun 2024 1:27 AM GMT (Updated: 27 Jun 2024 1:28 AM GMT)

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பர்கார் மற்றும் பலங்கிர் மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். பர்கார் மாவட்டத்தில் உள்ள தேவந்திஹி கிராமத்தில் நேற்று மதியம் மழை பெய்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஒரு ஆலமரத்தின் கீழ் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் சுக்தேவ் பாஞ்சோர் (58 வயது), நிரோஜ் கும்பர் (25 வயது) மற்றும் தனுர்ஜ்யா நாயக் (45 வயது) ஆகிய மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

அதேபோல பலங்கிர் மாவட்டத்தில் உள்ள சவுல்பஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சூர்யகாந்தி கர்சல் (40 வயது) மற்றும் அவரது மகன் தீபக் (18 வயது) இருவரும் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story