சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ் என்பவர், கடந்த 2019ம் ஆண்டு தனது வீட்டுக்கு டியூஷனுக்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை இணையத்தில் பரப்பியுள்ளார்.

இதன் மூலம் மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மனோஜ் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகைப்படங்கள் இருந்தன.

இந்த வழக்கு, திருவனந்தபுரம் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி ஆர்.ரேகா இன்று அதிரடி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், மனோஜ் மீது பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 3 மாதங்கள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, மொத்தம் 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை ஏக காலத்தில் மனோஜ் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தார்.


Next Story