கேரளா: பஸ் விபத்தில் சிக்கி மாணவி பலி; 15 பேர் காயம்


கேரளா:  பஸ் விபத்தில் சிக்கி மாணவி பலி; 15 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Jan 2025 9:07 PM IST (Updated: 1 Jan 2025 9:29 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்ததில் மாணவி ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.

கண்ணூர்,

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வலக்கை என்ற பகுதியில் குருமாத்தூர் சின்மயா பள்ளியை சேர்ந்த பஸ் ஒன்று, பள்ளி மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது. அப்போது அது விபத்தில் சிக்கியது.

இதுபற்றி கேரள அரசு வெளியிட்ட செய்தியில், வலக்கை பாலம் அருகே சென்ற பஸ் சரிவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இந்த சம்பவம் நடந்ததும், அந்த பகுதிவாழ் மக்கள் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் நித்யா எஸ். ராஜேஷ் என்ற 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி பலியானார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story