கர்நாடகா: மந்திரி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து


கர்நாடகா:  மந்திரி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து
x

கர்நாடகாவில் பெலகாவி அருகே மந்திரி மற்றும் எம்.எல்.சி. சென்ற கார் இன்று காலை மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

பெலகாவி,

கர்நாடகாவில் மந்திரி லட்சுமி ஹெப்பல்கார் மற்றும் எம்.எல்.சி. சன்னராஜ் ஹத்திஹோலி இருவரும் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடைய கார் பெலகாவி அருகே இன்று காலை 6 மணியளவில் சென்றபோது, நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்துள்ளது.

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில், மந்திரி லட்சுமியின் முதுகு மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் லேசான காயங்கள் ஏற்பட்டன.

சன்னராஜுக்கு தலையில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் இரண்டு பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை மந்திரி லட்சுமியின் மகன் மிருணால் ஹெப்பல்கார் கூறியுள்ளார்.


Next Story