குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பங்கேற்பு


குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பங்கேற்பு
x

தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

டெல்லி,

இந்தியாவின் 76வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படும். மேலும், ராணுவ அணிவகுப்பும் நடைபெறும். குடியரசு தின விழாவில் வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபொவொ சுபியண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் சில நாட்களில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு உடனடியாக பாகிஸ்தான் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story