பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நெதர்லாந்து நிறுத்த வேண்டும்: இந்தியா கோரிக்கை


பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நெதர்லாந்து நிறுத்த வேண்டும்: இந்தியா கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2025 2:18 PM (Updated: 21 March 2025 7:18 AM)
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நெதர்லாந்து நிறுத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நெதர்லாந்து நிறுத்த வேண்டும் என இந்திய பாதுகாப்பு துறை மந்திரி கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 18-ம் தேதி இந்த கோரிக்கையை பாதுகாப்பு துறை மந்திரி நெதர்லாந்து நாட்டிற்கு வைத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டிற்கு அதிக அளவில் கடற்படை சார் தளவாடங்களை நெதர்லாந்து வழங்கி வருகிறது. சீனா மற்றும் துருக்கிக்கு பிறகு அதிக அளவு பாக்கிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக நெதர்லாந்து உள்ளது. நவீன கண்ணிவெடி தகர்ப்பு கப்பல்கள், கடலோர ரோந்து கப்பல்கள் போன்றவற்றை சப்ளை செய்து வருகிறது நெதர்லாந்து.

நெதர்லாந்து கடற்படையில் இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற கப்பல்களையும் நெதர்லாந்து பாக் கடற்படைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story