60 ஆண்டுகளில் இல்லாத நிலை; மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது


60 ஆண்டுகளில் இல்லாத நிலை;  மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது
x
தினத்தந்தி 24 Nov 2024 10:31 AM (Updated: 24 Nov 2024 10:55 AM)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மாபெரும் வெற்றியை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெற்றுள்ளது. இதில், தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பாஜக வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மகாயுதி கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இதில் பாஜக மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிவசேனா 57, மற்றும் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றன. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி

உத்தவ் தாக்கரே கட்சி 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் சரத் பவார் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.இதன்படி பார்த்தால்மராட்டியத்தில், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து யாருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. மொத்த இடங்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு கிடைக்கும். ஆனால், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எந்தக் கட்சியும் 28 இடங்களை வெல்லவில்லை. இதனால், மராட்டிய வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story