ஹோலி பண்டிகை: பெங்களூரு-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

ஹோலி பண்டிகையையொட்டி பெங்களூரு-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூருவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 08549) வருகிற 16 மற்றும் 23-ந்தேதிகளில் விசாகப்பட்டினத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
மறுமார்க்கமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-விசாகப்பட்டினம் சிறப்பு ரெயில் (08550) வருகிற 17 மற்றும் 24-ந்தேதிகளில் பெங்களூருவில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கமாகவும் தவ்வாடா, அனகபல்லே, சாமல்கோட், ராஜமுந்திரி, எலுரா, விஜயவாடா, ஒங்கோலா, நெல்லூர், கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கே.ஆர்.புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.