காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: விமானம், ரெயில் சேவை பாதிப்பு


காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: விமானம், ரெயில் சேவை பாதிப்பு
x

கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் விமானம், ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர், பாரமுல்லா, பட்காம், குப்வாரா, பெந்திபுரா, அனந்த்நாக் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம், ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story