ஹத்ராஸ் சம்பவம்: உடல்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சியில் காவலர் உயிரிழப்பு


அதிர்ச்சியில் காவலர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 July 2024 4:25 PM IST (Updated: 3 July 2024 5:46 PM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் பணியில் காவலர் ரவி யாதவ் ஈடுபட்டு இருந்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரசில் நேற்று மாலை ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் குழுவில் காவலர் ரவி யாதவ் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

எட்டா மருத்துவக் கல்லூரியில் பணியிலிருந்த ரவி யாதவ் (வயது 30), சடலங்கள் மலைபோல் குவிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், திடீரென்று மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ரவி யாதவுக்கு அதே மருத்துவமனையில் உயிர் காக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டும் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ரவி யாதவுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story