குஜராத்: ஏரியில் மூழ்கி 5 பேர் பலி


குஜராத்: ஏரியில் மூழ்கி 5 பேர் பலி
x

குஜராத்தில் ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர்.

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் வடவலி கிராமத்திற்கு அருகே ஏரி உள்ளது. இந்த ஏரி அருகே பெரோஷா என்ற பெண் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன், சிறுமிகளுடன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் ஏரிக்குள் விழுந்துள்ளான்.

அந்த சிறுவனை மீட்க பெரோஷா உள்பட எஞ்சிய 4 பேரும் ஏரிக்குள் குதித்துள்ளனர். இதில், 5 பேரும் ஏரியில் மூழ்கினர்.

5 பேரின் கூச்சல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்து அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 5 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், அனைவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story