குஜராத்: தொழிற்சாலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் பரூக் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையில், கழிவுப்பொருட்களை சுத்திகரிப்பு செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கில் தொழிலாளர்கள் இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இதனிடையே இந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பரூக் மாவட்ட எஸ்.பி. மயூர் சாவ்தா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story