ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைப்பு


ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைப்பு
x

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 55-வது ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கவுன்சில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மந்திரிகள்(GoM) மற்றும் பிற அரசு அதிகாரிகளை உள்ளடக்கியது. இந்த கவுன்சில் கூட்டம் மத்திய பட்ஜெட் 2025-க்கு முன்னதாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மருத்துவ, ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நடந்த கவுன்சில் கூட்டத்தில், டேர்ம் லைப் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு செலுத்தப்படும் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில், ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. குழு, தனிநபர் மற்றும் மூத்த குடிமக்களின் பாலிசிகளுக்கான வரி குறித்து மேலும் சில ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என்று கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில், ஜனவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story