மராட்டியத்தில் ஜி.பி.எஸ். தொற்று பாதிப்பு: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

புனேயில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் வேகமாக பரவி வருகிறது.
புனே,
மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் நரம்பு சார்ந்த நோய் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று புனே பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 140 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் புனே சிங்காட் சாலை தயாரி பகுதியில் 60 வயது முதியவர் ஒருவர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்.
வயிற்று போக்கு மற்றும் பலவீனம் ஏற்பட்டு கடந்த மாதம் 27-ந்தேதி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால் புனே பகுதியில் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது
Related Tags :
Next Story