முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடம்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 26 Dec 2024 10:27 PM IST (Updated: 26 Dec 2024 11:27 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை பற்றி கேட்டறிவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பிரியங்கா காந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்த சூழலில், சிங்கின் உடல்நிலை பற்றி கேட்டறிவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சென்றுள்ளனர். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் சென்றுள்ளார். இதனை முன்னிட்டு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story