மகா கும்பமேளா குறித்து வெளிநாட்டு பெண் பக்தர் நெகிழ்ச்சி


மகா கும்பமேளா குறித்து வெளிநாட்டு பெண் பக்தர் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Jan 2025 7:25 AM IST (Updated: 13 Jan 2025 7:28 AM IST)
t-max-icont-min-icon

மகா கும்பமேளாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பிரயாக்ராஜ்,

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட உலகில் பல இடங்களில் இருந்தும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர்.

அதுபோல் இத்தாலியில் இருந்து எம்மா என்ற பெண் தனது தோழிகளுடன் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார். அவர் மகா கும்பமேளா நடைபெறும் இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள முதல் முறையாக வந்துள்ளேன். நான் ஒரு யோகா ஆசிரியர், என் நண்பர்கள் பலர் இந்தியர்கள். நான் இந்திய கலாசாரத்தை மிகவும் போற்றுகிறேன், முந்தைய பிறவியில் நான் இந்தியாவில் பிறந்ததாகவே உணர்கிறேன். எனக்கு இந்திய இசை, பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் பிடிக்கும் என்று கூறினார்.

மற்றொரு வெளிநாட்டு பெண் பக்தர் கூறுகையில்,

இந்தியா ஒரு சிறந்த நாடு. நாங்கள் இங்கே முதல் முறையாக கும்பமேளாவை பார்க்க வந்து இருக்கிறோம். இங்கே நாங்கள் உண்மையான இந்தியாவைக் காண்கிறோம். இந்த புனித ஸ்தல மக்களின் அதிர்வால் நான் மெய்சிலிர்க்கிறேன். நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன் என்றார்.


Next Story