செல்போன் டவர் கருவிகளை திருடிய கும்பல் கைது - 8 மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்


செல்போன் டவர் கருவிகளை திருடிய கும்பல் கைது - 8 மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்
x

8 மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகளை திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ,

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகளை திருடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த திருட்டு சம்பவங்களை தடுக்க மாநில போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், செல்போன் டவர் கருவிகளை திருடும் கும்பலை சேர்ந்த 5 பேரை உத்தரபிரதேச போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்த கொள்ளை கும்பல் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, மராட்டியம், பஞ்சாப், மத்தியபிரதேசம், அசாம் ஆகிய 8 மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகள் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலிடமிருந்து செல்போன் டவர் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story