மராட்டியத்தில் போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது


மராட்டியத்தில் போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது
x

மராட்டியத்தில் போதைப்பொருள் கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்டத்தின் பிவாண்டி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தங்கிருந்த அகமது மாலிக் என்ற சோனு என்பவரை சோதனை செய்ததில் பதுக்கி வைத்திருந்த 110 கிராம் அளவிலான எம்.டி.என் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.11.22 லட்சம் என கூறப்படுகிறது.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பிவாண்டி பகுதியை சேர்ந்த ரவீஷ் என்பவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரவீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story