கழுதை உயிரிழப்பு: மின் ஊழியர்களை கடத்திய 55 பேர் மீது வழக்கு


கழுதை உயிரிழப்பு: மின் ஊழியர்களை கடத்திய 55 பேர் மீது வழக்கு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Sep 2024 5:06 PM GMT (Updated: 20 Sep 2024 8:32 AM GMT)

கிராம மக்கள் 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்கிற கிராமத்தில் கழுதை ஒன்று உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மழை பெய்துகொண்டிருந்தபோது மின்கம்பம் அருகே சென்ற கழுதை, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதற்காக கிராம மக்கள், மின்வாரிய ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து, மின்சாரத்தைத் துண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சுமார் 2.5 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இவர்களின் செயலால் அரசுக்கு ரூ.1.46 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மின்சாரத்தை துண்டித்ததற்காகவும், அரசு ஊழியர்களை கடத்தியதற்காகவும் கிராம மக்கள் 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story