வீட்டு உரிமையாளரின் மனைவி, மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை - வேலைக்காரர் கைது


வீட்டு உரிமையாளரின் மனைவி, மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை - வேலைக்காரர் கைது
x

தாய் மற்றும் மகளை ஆபாசமாக வீடியோ எடுத்து அவர்களை வேலைக்காரர் சரோஜ்குமார் மிரட்டி வந்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜ் குமார். இவர் படகாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளருக்கு திருமணமாகி மனைவியும், பள்ளியில் படிக்கும் மகளும் உள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் மனைவி மற்றும் மகளையும் அவர்களுக்கு தெரியாமலேயே வேலைக்காரர் சரோஜ்குமார் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி வந்துள்ளார். அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி அவர்கள் இருவரையும் பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

சரோஜ் குமாரின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் சரோஜ் குமாரை கைது செய்தனர்.

1 More update

Next Story