டெல்லி: மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்...மக்கள் அவதி


டெல்லி: மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்...மக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Nov 2024 10:36 AM IST (Updated: 11 Nov 2024 10:48 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காற்று தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும்.

இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 349 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்ததால், டெல்லியின் பல்வேறு பகுதிகள் இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். பவானா மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய பகுதியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது. 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.


Next Story