டெல்லி: சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள் 11 பேர் கைது


டெல்லி:  சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள் 11 பேர் கைது
x

கோப்புப்படம்

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்து, முறையான ஆவணங்கள் இன்றி தங்கியுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதற்காக போதை பொருள் ஒழிப்பு படையினர், சிறப்ப பணியாளர் மற்றும் சட்டவிரோத வகையில் குடிபெயர்ந்தவர்களை கண்டறியும் குழு உள்ளிட்டோர் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக நடந்த பரிசோதனையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி துணை காவல் ஆணையாளர் ரவி குமார் சிங் கூறும்போது, கைது செய்யப்பட்ட 11 பேரில் 2 சிறுவர்களும் அடங்குவார்கள்.

டெல்லி தென்கிழக்கு மாவட்ட பிரிவை சேர்ந்த டெல்லி போலீசார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர் என கூறியுள்ளார். இதன்படி, கைது செய்யப்பட்ட 11 பேரும் வெளிநாட்டினருக்கான மண்டல பதிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை நாடும் கடத்தும் பணி இனி மேற்கொள்ளப்படும்.

அவர்கள் எல்லை வழியே இந்தியாவுக்குள் புகுந்து உள்ளூர் ரெயில்களில் பயணித்து, டெல்லியை அடைந்தனர். இதுபோன்று சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் முதல் இதுபோன்று சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள் 28 பேர் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.


Next Story